மழை காரணமாக பல மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை: தமிழ்நாட்டுக்கு இது வடகிழக்கு பருவமழை காலம். கன்னியாகுமரி அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தற்போது மழை பெய்துவருகிறது. இந்நிலையில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர், மற்றும் காரைக்கால் மாவட்டங்களின் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.