உள்ளூர் செய்திகள்

இந்தி மொழிக்கான புதிய மையங்கள்: ஸ்மிருதி இரானி

புதுடில்லி: நாடு முழுவதும், இந்தி மொழிப் படிப்புகளுக்கான மையங்களை அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக, மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். இந்தி மொழியை இன்னும் பிரபலமாக்கி வளர்க்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஆக்ராவிலுள்ள மத்திய இந்தி கல்வி நிறுவன நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர், இதுதொடர்பாக கூறியதாவது: இந்தி மொழியை விரிவாக்குவதும், பிரபலப்படுத்துவதும் தற்போது தேவையாக இருக்கிறது. எனவேதான், புதிய மையங்களை அமைக்க வேண்டியுள்ளது. இந்தி மொழியின் வளர்ச்சிக்கு பங்களிப்பவர்கள், உரிய கவுரவத்தைப் பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்