உள்ளூர் செய்திகள்

இடிந்து விழும் நிலையில் மாவட்டக் கிளை நூலகம்

ஆவடி: பட்டாபிராமில், இடிந்து விழும் நிலையில் உள்ள நகராட்சி கட்டடத்தில் இயங்கும், மாவட்ட கிளை நுாலகத்தை, பாதுகாப்பான கட்டடத்திற்கு மாற்ற வேண்டும் என, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆவடி அடுத்த பட்டாபிராம், தண்டுரை அரசு மேல்நிலை பள்ளிக்கு பின்புறம் திருவள்ளூர் மாவட்ட கிளை நுாலகம் உள்ளது. 1960ல் துவக்கப்பட்ட, இந்த நுாலகத்தில் 20 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. 1,500க்கும் அதிகமான வாசகர்கள், நுாலகத்தின் வாசகர் வட்டத்தில் உள்ளனர். நுாலக கட்டடம், எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மழை காலத்தின்போது, நுாலகத்திற்குள் தண்ணீர் கொட்டுகிறது. இதனால், வாசகர்கள் அமர்ந்து படிக்க முடியவில்லை. போதிய வெளிச்சம் மற்றும் காற்றோட்ட வசதியும் கிடையாது. கதவு, ஜன்னல்கள் சேதமடைந்து, உறுதி இழந்துள்ளன. கதவு இல்லாத ஜன்னல் வழியாக, இரவு மற்றும் விடுமுறை நாட்களில், அங்கு கூடி மது அருந்தும் விஷமிகள், உள்ளே மதுபாட்டில்களை உள்ளே வீசுவதும் தொடர்கிறது. இதுகுறித்து, வாசகர்கள் கூறியதாவது: நுாலகத்திற்குள் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப்பூச்சிகளும் தாராளமாக வலம் வருகின்றன. இதனால் வாசகர்கள் குறிப்பாக பள்ளி, கல்லுாரி மாணவியர், பெண் வாசகர்கள் இங்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர். வாசகர்களின் தினசரி வருகை மிகவும் குறைந்து விட்டது. மழை காலத்தில் இங்கு வருவதை வாசகர்கள் தவிர்க்கின்றனர். பாதுகாப்பான கட்டடத்திற்கு நுாலகத்தை மாற்ற மாவட்ட நுாலக துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்