உள்ளூர் செய்திகள்

கூடைபந்து போட்டியில் சத்யபாமா பல்கலை அணி சாம்பியன்

சோழிங்கநல்லுார்: கல்லுாரி அளவிலான, கூடைபந்து போட்டியில், சத்யபாமா பல்கலை அணி, சாம்பியன் பட்டம் வென்றது. மாநில அளவிலான, கல்லுாரிகளுக்கு இடையே கூடைபந்து போட்டி, அரும்பாக்கம் டி.ஜி., வைஷ்ணவா கல்லுாரி வளாகத்தில் நடந்தது. அதில், 16 கல்லுாரி அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில், சத்யபாமா பல்கலை அணி, 83-59 என்ற புள்ளி கணக்கில், ஜெ.ஐ.சி., கல்லுாரி அணியை தோற்கடித்தது. அதன் மூலம், சத்யபாமா பல்கலை அணி, அகில இந்திய அளவிலான, டில்லியில் நடக்க உள்ள, இந்தியன் கல்லுாரி கூடைபந்து லீக் போட்டியில் பங்கேற்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்