பள்ளி மேலாண்மை குழுவினருக்கு மூன்று நாள் பயிற்சி
ஆர்.கே.பேட்டை: கல்வியை மேம்படுத்தும் விதமாக, பள்ளி மேலாண்மை குழுவினருக்கு, மூன்று நாள் பயிற்சி நடந்து வருகிறது. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், அத்திமாஞ்சேரிபேட்டை அரசு தொடக்கப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழுவினருக்கான மூன்று நாள் பயிற்சி, நேற்று முன்தினம் துவங்கியது. இன்றுடன் பயிற்சி நிறைவு பெறுகிறது. பயிற்சியில், 14 பள்ளிகளைச் சேர்ந்த, 84 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆசிரிய பயிற்றுனர் மாதவன், அண்ணாமலை உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர். மாவட்ட திட்ட உதவி இயக்குனர் ஞானசேகரன், சிறப்புரை ஆற்றினார். பயிற்சியில், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம், பள்ளி மேம்பாட்டு திட்டம் தயாரித்தல், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் கல்வி சார்ந்த பிரச்னைகள் குறித்து விளக்கப்பட்டன.