உள்ளூர் செய்திகள்

பள்ளி கிரிக்கெட் போட்டியில் செட்டிநாடு அணி வெற்றி

துரைப்பாக்கம்: பள்ளி அளவிலான கிரிக்கெட் போட்டியில், செட்டிநாடு அணி வெற்றி பெற்றது. பி.எஸ்., சீனியர் மேல்நிலைப் பள்ளி சார்பில், பி.சி., சேகர் கோப்பைக்கான, பள்ளி கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. அதில், முதலில் விளையாடிய ஜி.டி., அலோஹா வித்யா மந்திர் அணி, 27.4 ஓவரில், அனைத்து விக்கெட்டையும் இழந்து, 97 ரன்கள் எடுத்தது. பின் விளையாடிய, செட்டிநாடு ஹரி ஸ்ரீ வித்யாலயம் பள்ளி அணி, 12.5 ஓவரில், ஒரு விக்கெட் இழப்பிற்கு, 98 ரன்கள் எடுத்து, ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்