உள்ளூர் செய்திகள்

புகாரைத் தொடர்ந்து பள்ளியில் தண்ணீர் வசதிக்கு ஏற்பாடு

தேனி: அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1,200 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இங்கு கழிப்பறை வசதி இருந்தும் தேவையான தண்ணீர் வசதி இல்லாததால், பயன்பாடில்லாமல் வெறும் காட்சி பொருளாக இருந்தது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) மகேஷ், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வீரமணி ஆகியோர் அல்லிநகரம் கிராம கமிட்டி தலைவர் புலவர் கோவிந்தசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இதை தொடர்ந்து தற்போது பள்ளியில் தண்ணீர் வசதிக்கு தேவையான பணிகள் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்