உள்ளூர் செய்திகள்

பதக்கங்களை குவித்த கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி மாணவிகள்

திருச்சி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருச்சியில் மாநில அளவிலான கேரம் போட்டிகள் நடந்தன. எட்டு பிரிவுகளில் நடந்த போட்டிகளில் மதுரை மாணவர்கள் வெற்றி பெற்றனர். கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி மாணவிகள் மூன்று பிரிவுகளில் பதக்கங்களை குவித்தனர். சீனியர் இரட்டையர் பிரிவில் ஐஸ்வர்யா, தர்ஷினி ஜோடி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஜூனியர் இரட்டையர் பிரிவில் சஹானா, தீபிகா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றனர். ஜூனியர் ஒற்றையர் பிரிவில் ரோஷினிஸ்ரீ வெள்ளிபதக்கம் வென்றார். ஜூனியர் இரட்டையர் பிரிவு புனிதஜோசப் பள்ளி மாணவர்கள் பத்ரிநாத், கண்ணன் வெள்ளி பதக்கம் வென்றனர். சீனியர் ஒற்றையர் பிரிவில் சாரதா பள்ளி மாணவி ஸ்வேதா வெள்ளி பதக்கம் வென்றார். வெற்றிபெற்ற வீரர்களை மண்டல முதுநிலை மேலாளர் வாழ்வீமராஜா, மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்