உள்ளூர் செய்திகள்

இகோ டெக்ஸ்டைல்ஸ் தேசியள விலான கருத்தரங்கு

கோவை: பாரதியார் பல்கலையின் ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு துறை சார்பில், இகோ டெக்ஸ்டைல்ஸ் எனும் தேசியளவிலான கருத்தரங்கு நேற்று நடந்தது.துறை தலைவர்(பொ) ரூபா தலைமை வகித்தார். பல்கலை பதிவாளர் செந்தில்வாசன் துவக்கிவைத்தார். அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையின் மனையியல் டீன் வாசுகி ராஜா பேசுகையில், முன்னொரு காலத்தில் உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றுக்கு இயற்கை முறையை சார்ந்திருந்தோம். பின்னர், செயற்கை உலகத்துக்கு மாறத்துவங்கினோம். ஒரு காலகட்டத்தில் நமக்கும், சுற்றுச்சூழலுக்கும் இச்செயற்கை முறை தீங்கு விளைக்க துவங்கியதால், மீண்டும் இயற்கை முறைக்கு மாறத்து வங்கியுள்ளோம்.உதாரணமாக, இயற்கை உணவு வகைகளை தற்போது உண்ணத் துவங்கியுள்ளோம். இயற்கை முறைக்கு சாதாரணமாக மாறிவிடமுடியாது என்பதால் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்ய வேண்டியுள்ளது. இயற்கை நுாலிலை, சாயம், தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு நாம் மாறி, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும், என்றார். தேசத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள கல்லுாரி, பல்கலைகளை சேர்ந்த, 100 மாணவர்கள் பங்கேற்றனர்; 70 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. பேராசிரியர்கள் அமுதா, சங்கீதா, கிரேஸ் அன்னபூரணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்