உள்ளூர் செய்திகள்

ஆடீட்டர் தேர்வு; இந்திய இளைஞர் உலக சாதனை

துபாயில், இந்தியன் ஹைஸ்கூல் பட்டதாரியான, ராம்குமார் ராமன், மத்திய கிழக்கு நாடுகளின், அங்கீகரிக்கப்பட்ட பட்டயக் கணக்காளர் சங்கத்தில் இணைந்த, முதல் இளம் உறுப்பினர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். மாணவர்கள், 18 வயதில், பட்டயக் கணக்காளர் படிப்பில் சேர்ந்து, மூன்று ஆண்டுகளில், தேர்வை முடிப்பர். ஆனால், ராம்குமார் ராமன், 18 வயதிலேயே, இத்தேர்வை எழுதி முடித்து, சாதனை செய்துள்ளார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில், 1904ல், ஏ.சி.சி.ஏ., எனப்படும், சர்வதேச பட்டயக் கணக்காளர் சங்கம் உருவாக்கப்பட்டது. அறிவு, திறன், தொழில் என, மூன்று பிரிவுகளின் கீழ், 14 பாடங்களுக்கு, பட்டயக் கணக்காளர் தேர்வு நடைபெறுகிறது. மூன்று ஆண்டுகளில், மூன்று கட்டமாக நடைபெறும் இத்தேர்வில், வெற்றி பெறுவோருக்கு, சர்வதேச பட்டயக் கணக்காளர் சான்றிதழ் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்