விபரீத முடிவுகளை எடுக்காதீங்க! : மாணவர்களுக்கு வேண்டுகோள்
சென்னை: &'மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுப்பது, வேதனை அளிக்கிறது&' என, முதல்வர் மற்றும் துணை முதல்வர் தெரிவித்துள்ளனர்.அவர்களின் அறிக்கை:இ.பி.எஸ்., - முதல்வர்: மதுரை மாவட்டம், தமிழ்நாடு சிறப்பு காவல்படை வளாகத்தில் உள்ள காவல் குடியிருப்பில், ஆறாம் அணியில், உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும், முருகசுந்தரம் மகள் ஜோதிஸ்ரீதுர்கா, தற்கொலை செய்து கொண்டு இறந்தார் என்ற செய்தி அறிந்து, மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு, என் ஆழ்ந்த இரங்கல்.வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழும், மாணவ செல்வங்கள், இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுப்பது, மிகுந்த மனவேதனை அளிக்கிறது.வாழ்வில் வெற்றி பெற, எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், மாணவ செல்வங்கள், மன உறுதியையும், விடா முயற்சியையும், வளர்த்து கொண்டால், வெற்றி பெறுவது நிச்சயம்.துணை முதல்வர் பன்னீர்செல்வம்: மதுரை மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா தற்கொலை செய்து, இறந்த செய்தி அறிந்து, மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது பிரிவால் துயருற்றிருக்கும், அவரது குடும்பத்தினருக்கு, என் ஆழ்ந்த இரங்கல்.எதிர்கால துாண்களாகிய, மாணவ செல்வங்களின், இதுபோன்ற விபரீத முடிவுகள், மிகுந்த துயரத்தை அளிக்கின்றன. மாணவ செல்வங்கள், மனம் தளராமல், எதையும் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையை, வளர்த்துக் கொள்ள வேண்டும். பெற்றோரும், மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.