பள்ளி ஆசிரியர் ஒருவர், கொத்தனாரின் உதவியாளராக பணி
தங்கவயல்: பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பள்ளி ஆசிரியர் ஒருவர், கொத்தனாரின் உதவியாளராக பணி செய்கிறார்.கர்நாடகாவில் கொரோனா பரவலால் ஓராண்டுக்கும் மேலாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது. தனியார் பள்ளி ஆசிரியர்கள் சம்பளம் இன்றி வறுமையில் வாடியுள்ளனர். வருமானம் இல்லாமல் முடங்கி இருந்தால் குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்ற என்ன செய்வது என, பலரும் பல வழிகளில் வருமானம் பார்க்க இறங்கி உள்ளனர்.இந்நிலையில் எதற்கும் உழைக்க தயங்காத தனியார் பள்ளி ஆசிரியரான,முல்பாகல் தொம்மசந்திராவின் நரசிம்மா, 47, கட்டட வேலை செய்யும் கொத்தனாருக்கு உதவியாளர் வேலையில் இறங்கி உள்ளார்.இதன் மூலம், தினமும் 600 ரூபாய் கிடைக்கிறதாம். வாரத்திற்கு ஆறு நாள் வேலை. வாரக்கூலி 3,600 ரூபாய் வாங்குகிறார். படித்த பட்டப்படிப்புக்கு எப்போது தான் நல்ல காலம் பிறக்கப்போகுதோ என்று நரசிம்மா கலங்கி நிற்கிறார்.