உள்ளூர் செய்திகள்

பெற்றோரே... குழந்தைகளை கவனமா பார்த்துக்கோங்க! மருத்துவர்கள் எச்சரிக்கை

கோவை: கொரோனா மூன்றாம் அலை வரும்பட்சத்தில், குழந்தைகளே அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படுவர் என்று, டாக்டர்கள் கணித்துள்ளனர். பெற்றோர் மூலமே தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாலும், உடனிருந்து கவனிக்க வேண்டியிருக்கும் என்பதாலும், தகுதியுள்ள அனைத்து பெற்றோரும் விரைவில், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நாடு முழுவதும், கொரோனா இரண்டாம் அலை, கோரதாண்டவம் ஆடி வருகிறது.இந்த முறை இறப்பு பட்டியல்களை ஆராயும் போது, 30 முதல் 45 வரையுள்ள இளம் வயதினரும், இணை நோய்கள் ஏதும் இன்றியே, இறப்பை தழுவியுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரையில், கடந்த பத்து நாட்களில் மட்டும் 12,211 குழந்தைகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மே 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை தொற்று பாதிப்பு சராசரி, 771 என்ற அளவில் இருந்தது. மே 10 முதல் 19ம் தேதி வரை சராசரி பாதிப்பு, 1,075 ஆக இருந்தது. தற்போது, 1221 என்ற அளவில் அதிகரித்துள்ளது.பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.இது தொடர்பாக, உலகம் முழுவதும் மருத்துவ நிபுணர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள விழிப்புணர்வையடுத்து, கோவையில் முன்னணி மருத்துவமனைகள், இப்போதிருந்தே குழந்தைகளுக்கான பிரத்யேக வார்டு வசதிகளை, ஏற்படுத்த துவங்கி விட்டன. ஆகவே, ஒவ்வொரு பெற்றோரும் மிகவும் ஜாக்கிரதையாக குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும். &'பெற்றோர் தடுப்பூசி போடணும்&' கொரோனா முதல் அலையின் போது, குழந்தைகளுக்கு அறிகுறி ஏதும் இல்லை. தற்போது, சிகிச்சைக்கு வரும்பொழுதே காய்ச்சல், இருமல், வயிற்றுப்போக்கு, வாந்தி, போன்ற அறிகுறிகளுடன்தான் வருகின்றனர். வெளியிடங்களுக்கு சென்று வரும் பெற்றோர் மூலமும், குடியிருப்புகளில் விளையாட செல்வதாலும், பாதிப்பு அதிகமாகவுள்ளது. முதல் கட்டத்திற்கும் தற்போதும், கட்டாயம் வேறுபாடுகள் உள்ளன. டில்லி, மும்பை, ஐதராபாத் ஆகிய இடங்களில், தற்போது சாதாரண அறிகுறியிருந்த குழந்தைகளுக்கு, பிற உறுப்புகள் பாதிக்கப்படுவதாக தகவல் பதிவாகி வருகிறது.இருதய பாதிப்பு, சர்க்கரை, நுரையீரல், புற்றுநோய் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு, கொரோனா தொற்று ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு தொற்று பரவாமல் இருக்க, 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர், கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். - டாக்டர் சோபி ஆனந்தி குழந்தைகள் நல மருத்துவர், கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை &'விளையாட விடாதீர்&' இரண்டாம் அலையில் அதிக குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மட்டுமின்றி, தொற்று வீரியமும் சற்று அதிகரித்துள்ளது. இந்தியாவில் மூன்றாம் அலையில், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.கடந்த கால பெருந்தொற்று பரவல் வரலாறுகளை ஒப்பிடுகையில், முதல் இரண்டு முறை பெரியவர்கள், மூன்றாம் தாக்கத்தில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பெற்றோர் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முன்பே, இணை நோய் உள்ள குழந்தைகளை, கூடுதல் கவனமுடன் பாதுகாக்க வேண்டும். இப்போதைக்கு வெளியிடங்களில், விளையாட அனுமதிக்க கூடாது. குழந்தைகளுக்கு அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்ய வேண்டும்.இதன் வாயிலாக, அருகிலுள்ள குழந்தைகளுக்கு பரவுவதையும், வீட்டில் வயதானவர்கள், உடம்பு முடியாதவர்கள், உடன்பிறப்பு குழந்தைகளுக்கு பரவாமல் தடுக்கலாம். - டாக்டர் ஜெயவர்த்தனா குழந்தைகள் நல மருத்துவர், பி.எஸ்.ஜி., மருத்துவமனை &'மாஸ்க் போட வைப்பது சவால்&'திருமணம், கடைகளுக்கு குழந்தைகளையும் அழைத்துச்சென்றதால், குழந்தைகள் மத்தியில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தெருவில் பத்து பேர் என்பது மாறி, ஒரு வீட்டில் பத்து பேர் என்ற அளவில் கொரோனா அதிகரித்துள்ளதால், குழந்தைகளையும் வெகுவாக பாதிக்கிறது.தடுப்பூசி போடாமல் இருப்பதால் மூன்றாம் அலையில் குழந்தைகளுக்கு பாதிப்பும்,வீரியமும் அதிகம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூர், தைவானில் குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகம். அதே நிலை நமக்கும் ஏற்படலாம். குழந்தைகள் நல மருத்துவர்கள்தான் அச்சப்படுகிறோம்; பெற்றோர் அச்சப்படுவதாக தெரியவில்லை. தொற்று ஏற்பட்டால் குழந்தைகளை, மருத்துவமனையில் தனிமைப்படுத்துவது சவாலான விஷயம். முறையாக மாஸ்க் போட வைப்பதும், ஓரிடத்தில் படுக்கவைப்பதும் இயலாது. ஆகவே, உடன் தாயும் தங்கியாக வேண்டும். அதற்கு முன் தாய்மார்கள், தங்களை தொற்று தாக்காமல் இருக்க, தடுப்பூசி போட்டு பாதுகாத்துக்கொள்ள வேண்டும். - டாக்டர் பூமா குழந்தைகள் நல மருத்துவர், கோவை அரசு மருத்துவமனை என்ன அறிகுறிகள்?குழந்தைகளுக்கு சாதாரண காய்ச்சல், வயிற்றுப்போக்கு, போன்ற அறிகுறிகள் இருக்கும்; பெரியவர்கள் போன்று தீவிர அறிகுறி தென்படாது. வீட்டில் ஒருவருக்கு பாதிக்கப்பட்டால், கட்டாயம் தனிமைப்படுத்திக்கொண்டு குழந்தைகளுக்கும், பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?* வெளியிடங்களுக்கு சென்று வரும் பெரியவர்கள், இரண்டு நாட்களுக்கு குழந்தைகளிடம் இருந்து விலகியிருக்க வேண்டும்.* மாஸ்க், கைகழுவுதல், சமூக இடைவெளி, தடுப்பூசி ஆகிய நான்கு விதிமுறைகளையும் பெற்றோர் பின்பற்ற வேண்டும்.* வெளியிடங்களுக்கு செல்வதை தடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு வெளி உணவு வழங்குவதை தவிர்க்க வேண்டும். அதிக தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும்.* குழந்தைகளை &'ஆக்டிவ்&' ஆக வைத்திருக்க, வீட்டிலேயே விளையாட விட வேண்டும். சரிவிகித சத்தான உணவு கொடுக்க வேண்டும் என்கிறார் டாக்டர் பூமா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்