உள்ளூர் செய்திகள்

அனைத்து வகுப்புகளுக்கும் ஆல்பாஸ் இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு

கோவை: கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் திறக்கப்படாததால், அனைத்து வகுப்புகளுக்கும், &'ஆல்-பாஸ்&' அறிவித்து, &'எமிஸ்&' இணையதளத்தில் பதிவேற்றுமாறு, பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில், பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை முறைமை (எமிஸ்) இணையதளத்தில், மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் சார்ந்த அனைத்து தகவல்களும் பதிவேற்றப்படுகின்றன. இந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ஒவ்வொரு மாணவருக்கும் பிரத்யேக அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. வேறு பள்ளிகளுக்கு இடமாறுதல் பெற்று சென்றாலும், இந்த அடையாள எண் மட்டும் கொண்டு சென்றால் போதுமானது. இடைநிற்றல் எளிதில் கண்டறியும் வகையில், கொண்டுவரப்பட்ட இம்முறையின் படி, ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விபரங்கள், அடுத்த வகுப்புக்கு பரிமாற்றம் செய்யப்படும்.கொரோனா தொற்று காரணமாக, பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைத்து வகுப்புகளுக்கும், &'ஆல்-பாஸ்&' அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வியாண்டுக்கான ஆயத்தப்பணிகள் நடப்பதால், நலத்திட்ட பொருட்கள் வழங்கும் வகையில், தகவல்களை புதுப்பிக்குமாறு கமிஷனர் நந்தகுமார்உத்தரவிட்டுள்ளார். இதில் அனைத்து வகுப்புகளும் ஆல்பாஸ் செய்யப்படுவதால், புதிய சேர்க்கை தவிர, ஏற்கனவே படித்த மாணவர்களின் விபரங்கள், புதுப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்