நீட் பயிற்சி ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் திடீர் நிறுத்தம்
சென்னை: அரசின் &'நீட்&' பயிற்சி ஒருங்கிணைப்பாளர் களுக்கு திடீரென வழிகாட்டுதல்கள் நிறுத்தப் பட்டு உள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.தமிழக பாடத்திட்ட மாணவர்களுக்கு சரியான பயிற்சி கிடைக்காததால், நீட் தேர்வில் முன்னிலை பெற முடியவில்லை. இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, பள்ளி கல்வி துறை சார்பில் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.இந்த பயிற்சி திட்டம், அ.தி.மு.க., ஆட்சியில் அறிமுகமானதால், தி.மு.க., ஆட்சியில் தொடர்வதா என ஆசிரியர்கள் குழப்பம் அடைந்தனர்.&'நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவோம்&' என தி.மு.க., கூறி வருவதால், தி.மு.க., ஆட்சி அமைந்ததும், பயிற்சி அளிக்க உடனடியாக அனுமதி அளிக்கப்படவில்லை; தாமதமாக அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் நீட் இலவச பயிற்சி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான வழிகாட்டுதல்கள், திடீரென நிறுத்தப்பட்டு உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். நீட் ஒருங்கிணைப்பாளர்களின் மாநில &'வாட்ஸ் ஆப்&' குழுவில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுஉள்ளன. நீட் பயிற்சி குறித்து, ஒருங்கிணைப்பாளர்கள் தங்களின் கருத்துகளை பதிவிடும் வசதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் நீட் பயிற்சியின் அடுத்தடுத்த வகுப்புகள் குறித்த வழிகாட்டுதல் பெற முடியாமல், ஆசிரியர்களும், ஒருங்கிணைப்பாளர்களும் தவித்து வருகின்றனர். இந்த நெருக்கடியான நிலையில், பயிற்சியை தொடர்வதா, நிறுத்துவதா என ஆசிரியர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.