உள்ளூர் செய்திகள்

கல்லூரி ஆசிரியர் ஊதிய உயர்வு: புதிய உத்தரவு

 நெட், ஸ்லெட் ஆகியவை தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமன்றி, எம்.பில்., அல்லது பிஎச்.டி., முடித்த அனைவருமே ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழகங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் மற்றும் படிகளை, தமிழக அரசு கடந்த செப்டம்பரில் திருத்தி அமைத்தது.இதில், நெட் அல்லது ஸ்லெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற எம்.பில்., அல்லது பிஎச்.டி., முடித்த ஆசிரியர்கள் தான், 2008 செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து அளிக்கப்படும் ஊக்க ஊதிய உயர்வை பெற முடியுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, எம்.பில்., மற்றும் பிஎச்.டி., முடித்தவர்கள், நெட் அல்லது ஸ்லெட் தேர்ச்சியை வலியுறுத்தக் கூடாது என, கோரிக்கை விடுத்தனர். பல்கலைக்கழக மானியக் குழு, அந்தந்த துறையில் பிஎச்.டி., அல்லது எம்.பில்., முடித்தவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு அளிக்கிறது. அவர்களிடையே, நெட் அல்லது ஸ்லெட் தேர்ச்சி பெற்றவர்கள் என பாகுபாடு ஏதும் காட்டுவதில்லை.எனவே, 2006 ஜனவரி முதல் தேதிக்கு பின் நியமிக்கப்பட்ட எம்.பில்., அல்லது பிஎச்.டி., முடித்தவர்கள், நெட் அல்லது ஸ்லெட் தேர்ச்சி பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும் அவர்கள் ஊக்க ஊதிய உயர்வை, 2008 செப்டம்பர் முதல் தேதியில் இருந்து பெறத் தகுதியுடையவர்கள் எனத் தற்போது உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்