உள்ளூர் செய்திகள்

உக்ரைன் மருத்துவ மாணவர்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தல்

ஈரோடு: உக்ரைன் போரால் பாதிப்பு ஏற்பட்டு தமிழகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள், சொந்த மாநிலத்திலேயே படிப்பை தொடர வாய்ப்பு ஏற்படுத்தி தர மத்திய அரசிடம், தமிழக முதல்வர் வலியுறுத்தி உள்ளார், என அமைச்சர் மஸ்தான் கூறினார்.ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடந்து வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது. ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., இளங்கோவன், மேயர் நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆய்வுக்கு பின், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், நிருபர்களிடம் கூறியதாவது:கடந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு தமிழகத்தில் இருந்து, 1,700 பேர் கொச்சியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். இணை மானியம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தாண்டு, 4,074 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் விரைவில் வர உள்ளனர். அவர்களுக்கு இணை மானியம் வழங்க, 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.உக்ரைன் போரில் பாதிப்பு ஏற்பட்டு தமிழகம் திரும்பிய மருத்துவம், வேளாண்மை, பொறியியல், பட்டப்படிப்பு மாணவர்கள் தொடர்ந்து கல்வி பயில வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புக்கு மத்திய அரசு சார்ந்த நிலை உள்ளதால், அம்மாணவர்கள் சார்ந்த மாநிலத்திலேயே படிப்பை தொடர வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என மத்திய அரசிடம், தமிழக முதல்வர் வலியுறுத்தி உள்ளார். அதற்கு மத்திய அரசு பதில் தெரிவிக்காததால், மருத்துவ படிப்பு கேள்விக்குறியாக உள்ளது.அதேநேரம் முதல்வர் தனக்கான அதிகாரத்தில், பொறியியல், வேளாண் கல்லுாரிகளில் படிக்கும் வாய்ப்பை அவர்களுக்கு உருவாக்கி, தகுதியானவர்கள் படிக்க வாய்ப்பு கொடுத்தார். மருத்துவ மாணவர்கள் பாதிப்பு குறித்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்