உள்ளூர் செய்திகள்

அழகப்பா அரசு கல்லுாரி மாணவர் சேர்க்கை நிறைவு

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா அரசு கல்லுாரியில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை நிறைவு பெற்றது என முதல்வர் (பொ) துரை தெரிவித்தார்.அவர் கூறியதாவது, இக்கல்லுாரியில் மாணவர்கள் சேர்க்கை 2 கட்டமாக நடத்தப்பட்டன. இதில் முழுவதிலும் மாணவர்கள் சேர்க்கை செய்யப்பட்டனர். அரசு அறிவித்த 20 சதவீத மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கும் இனசுழற்சி, மதிப்பெண் அடிப்படையில் நடந்துள்ளது. சேர்க்கை முடிவடைந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கிவிட்டன, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்