உள்ளூர் செய்திகள்

கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும்: பிரதீபா பாட்டீல்

சாந்த் காட்கே பாபா அமராவதி பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்திய பிரதீபா பாட்டீல், அனைத்து நிலைகளிலும் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டியுள்ளதே தற்போது நம்மை எதிர்நோக்கியுள்ள சவாலாகும் என்றார். 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் உயர்கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போதைய எழுத்தறிவு 64.8 சதவீதமாக உள்ளது. உயர்வி படித்தவர்களின் சதவீதம் 11 சதவீதமாக உள்ளது. வளர்ச்சி அடைந்த நாடுகளில் உயர்கல்வி பெற்றவர்களின் எண்ணிக்கை 54 சதவீதமாக உள்ளது. சமூகத்தில் அனைத்துப் பிரிவினரின் அறிவாற்றலை வளர்ப்பதற்கு உத்தரவாதம் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஊரக வளர்ச்சியிலிருந்து விஞஞான ஆய்வு வரை பல்வேறு துறைகளிலும் நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். பல்நோக்கு அடிப்படையில் விரிவான தளத்தில் நமது கல்வி முறை இருக்க வேண்டும். மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் நமது படிப்பு இருக்க வேண்டும். இதற்கேற்ற வகையில் பல்கலைக்கழகங்கள் படிப்புகளை வகுக்க வேண்டும் என்றும் பிரதீபா பாட்டில் குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்