உள்ளூர் செய்திகள்

கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியில் பி.எட்., படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி: கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியில் பி.எட்., படிப்பிற்கு புதுச்சேரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.இது குறித்து புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லுாரி முதல்வர் செந்தில் வினோத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியில் 2023-24ம் கல்வியாண்டின் பட்டபடிப்பு முடித்தவர்களுக்கான பி.எட்., இரண்டாண்டு பட்ட படிப்பிற்கு புதுச்சேரியை சேர்ந்த தகுதியுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விண்ணப்பம் கல்லுாரியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 3ம் தேதி முதல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்து, தேவையான நகல் சான்றிதழ்களை இணைத்து தபாலில் அல்லது நேரில் சமர்பிக்கலாம்.இந்த பி.எட்.,படிப்பின் சேர்க்கைக்கான கல்வி தகுதிகள், கட்டண விபரம் ஆகியவற்றை www.ccepdy.in என்ற இணையதள முகவரியில் அல்லது அனைத்து அலுவலக நாட்களில் கல்லுாரியில் நேரில் அணுகி தகவல் பெறலாம். அடுத்த மாதம் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள பிற மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம். புதுச்சேரியை சேர்ந்த மாணவர்கள் சேர்க்கைக்கு பிறகு காலியிடங்கள் இருப்பின் பிற மாநிலத்தவரின் விண்ணப்பங்கள் நிபந்தனைக்குட்பட்டு பரிசீலிக்கப்படும்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்