தலைமை ஆசிரியர் பணியிடம்:தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
இதற்கு பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.பதவி உயர்வு பெற்ற முதுநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வீமன் என்பவர் தாக்கல் செய்த மனு:ஒரு மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் பதவிக்கான சீனியாரிட்டியை நிர்ணயிக்க, சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என பள்ளி கல்வித் துறை கடந்த 88ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் இந்த அரசாணை பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் திண்டுக்கல் தலைமை கல்வி அதிகாரி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை பின்பற்றினால், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், தங்கள் சீனியாரிட்டியை இழப்பர். அவர்களுக்கு உதவி தலைமை ஆசிரியர், தலைமை ஆசிரியர் பதவிகளுக்கு வாய்ப்பு கிடைக்காது.இதுகுறித்து அரசுக்கு மனுக்கள் அனுப்பினோம். திண்டுக்கல் மாவட்ட தலைமை கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரினோம். இந்த அதிகாரி தவிர, வேறு எந்த மாவட்டத்திலும் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.எனவே, கடந்த செப்டம்பர் மாதம் நாங்கள் அனுப்பிய மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.கடந்த 88ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை பின்பற்றுமாறு அனைத்து தலைமை கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை நீதிபதி சந்துரு விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.வி.முரளிதரன் ஆஜரானார். மனுவுக்குப் பதிலளிக்கும்படி, பள்ளி கல்வித் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி சந்துரு உத்தரவிட்டார்.