உள்ளூர் செய்திகள்

இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்

இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:   ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக, 1,367 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், இரண்டு லட்சத்து 45 ஆயிரம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். 2009 - 2010ம் ஆண்டில் இத்துறைக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில், கல்விக்காக மட்டும் 77 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   இந்த துறையின் கீழ் இயங்கும் ஆரம்பப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, வேலை வாய்ப்பு அலுவலக மாநில பதிவு மூப்பு அடிப்படையில், அருந்ததியர் பிரிவைச் சேர்ந்த 46 பேர் உட்பட மொத்தம் 303 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமன உத்தரவுகளை, துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்