அடூருக்கு கேரள பல்கலை. கௌரவ டாக்டர் பட்டம்
கேரளாவில் உள்ள மகாத்மா காந்திப் பல்கலைக்கழகம் இவருக்கு ஏற்கெனவே கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர் மம்முட்டி, இசைக் கலைஞர் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கும் கேரள பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கி கௌரவித்துள்ளது. ஆளுநர் ஆர்.எஸ். கவாய் இந்த விருதுகளை வழங்கினார். கல்வி அமைச்சர் எம்.ஏ., பேபி, துணைவேந்தர் ஏ.ஜெயகிருஷ்ணன், இணைத் துணைவேந்தர் ஜே.பிரகாஷ் உள்ளிட்டோர் இந்த சிறப்பு பட்டம் அளிப்பு விழாவில் பங்கேற்றனர்.