உள்ளூர் செய்திகள்

தியாகிகள் வாரிசுக்கு கல்விக்கடன் வங்கிகளுக்கு கலெக்டர் அறிவுரை

கலெக்டர் சகாயம் தலைமை வகித்து பேசியதாவது: குழந்தைகள் படிக்கும் காலங்களில் பெற்றோர் கஷ்டப்படுவர். அந்நிலையை மாற்றத்தான் வங்கிகள் கடன் வழங்க முன்வருகின்றன. இந்த கடன்களை நன்கு பயன்படுத்திக்கொண்டு, மீண்டும் முறையாக திரும்ப செலுத்த வேண்டும்.கொல்லிமலையில் குழந்தைகளுக்கு போதிய அளவு கல்வி அறிவு இல்லாத நிலையை, அந்த பள்ளியை பார்வையிடுவதற்காக 8 கி.மீ., தூரம் நடந்து சென்றேன். அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவும், பள்ளிக்கு ஆசிரியர் ஒருவரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தியாகிகள் வாரிசுகள் கல்வி அறிவு இல்லாமல் கூலி வேலைக்கு செல்லும் நிலையை மாற்ற வேண்டும்.அதற்காக பழையபாளையம் பள்ளியில் படித்த தியாகிகள் வாரிசு ஆங்கிலப்பாடத்தில் தோல்வி அடைந்ததால், குடும்ப சூழ்நிலை காரணமாக கூலி வேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையை மாற்ற கல்வித்துறை மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு, தேர்ச்சி பெறச்செய்து பள்ளியில் சேர்த்து விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, தியாகிகள் வாரிசுக்கு கல்விக்கடன் வழங்க வங்கிகள் முன் வரவேண்டும். இனி வரும் காலங்களில் கல்விக்காக அதிக கடன்கள் வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்