மகளிர், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்: விழிப்புணர்வு நிகழ்ச்சி
விழுப்புரம்: கண்டமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் மாவட்ட காவல் துறையின் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றதடுப்பு பிரிவு போலீஸ் சார்பில், கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலை பள்ளியில், பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரகுமார் தலைமை வகித்தார்.மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றதடுப்பு பிரிவு சப் இன்ஸ் பெக்டர் கலைச்செல்வி, காவலர் வாசுகி ஆகியோர் பங்கேற்று, சமூகத்தில் நடக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், அதற்கான தண்டனை, அதனை தடுக்கும் முறைகள், சட்ட உதவி மையங்கள், போக்சோ குற்றங்கள், அதற்கு எதிராக புகாரளித்து தீர்வு காண்பது குறித்து விளக்கி பேசினார்.அவசர உதவிக்கு மகளிர் உதவி மையம் 1091, குழந்தைகள் உதவி மையம் 1098 ஆகிய இலவச எண்களில் அழைத்து புகார், ஆலோசனைகள் பெறலாம் என அறிவுறுத்தினர். ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.