மாணவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான பயிற்சி வகுப்பு
புதுச்சேரி: புதுச்சேரி தேர்தல் துறை சார்பில், வரும் ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடையும் கல்லுாரி மாணவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான பயிற்சி வகுப்பு நடந்தது.பயிற்சி வகுப்பினை தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் துவக்கி வைத்தார். துணை தலைமை தேர்தல் அதிகாரிகள் தில்லைவேல், ஆதர்ஷ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் ஓட்டின் முக்கியத்துவம் குறித்து முதன்முறை வாக்காளர்களுக்கு எடுத்துரைத்தனர்.முறைப்படுத்தப்பட்ட வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்களிப்பு அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கோவிந்தசாமி வாழ்த்தி பேசினார். பயிற்சியாளர்கள் விவேகானந்தன், பிரஷாந்த் ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். புதுச்சேரியின் அனைத்து கல்லுாரிகளில் உள்ள தேர்தல் கல்விக்குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.