பரமக்குடியில் இளைஞர்களுக்கு கைத்தறி நெசவு பயிற்சி துவக்கம்
பரமக்குடி: பரமக்குடியில் கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகம் சார்பில் இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர்களை உருவாக்கும் திட்ட பயிற்சி முகாம் துவக்கப்பட்டது.பரமக்குடி கைத்தறி உதவி இயக்குனர் ரகுநாத் தலைமை வகித்து பயிற்சியை துவக்கி வைத்தார். மாவட்ட தொழில் மையம் அலுவலர் கண்ணன், நெசவாளர் சேவை மைய அலுவலர் திலீபன், பரமக்குடி, எமனேஸ்வரம் நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் பெடரேசன் செயலாளர் கோதண்டராமன் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்தினர்.தொடர்ந்து கைத்தறி துறை சார்பில் இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி 45 நாட்கள் ஜீவா நகர் நெசவாளர் பயிற்சி மையத்தில் நடக்க உள்ளது. இந்த முகாமில் 35 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் என 20 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு நெசவு பயிற்சிக்கு தேவையான பயிற்சி புத்தகங்கள், எழுது பொருட்கள் வழங்கப்பட்டன. உதவி கைத்தறி இயக்குனர் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.