மூணாறு அரசு கல்லுாரி செஸ் வளாகமாக அறிவிப்பு
மூணாறு: மூணாறு அரசு கல்லூரி செஸ் விளையாட்டு வளாகமாக அறிவிக்கப்பட்டது.மூணாறு அரசு கல்லூரியில் மாணவ, மாணவியர்களின் சிந்தனை, திறன் ஆகியவற்றை ஊக்குவித்து போதை பொருட்களுக்கு அடிமையாகாமல் விளையாட்டுகளில் கவனம் செலுத்தும் வகையில் செஸ் விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.திருச்சூரைச் சேர்ந்த மனோஜ்குமார் இரண்டு வாரங்களாக விளையாட்டு குறித்து பயிற்சி அளித்தார். அதனை அனைத்து மாணவ, மாணவியர்களும் முழுமையாக கற்றனர். அதனையொட்டி கல்லூரி வளாகத்தில் செஸ் பலகை போன்று வடிவமைத்து மாணவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் விளையாடி மகிழ்ந்தனர். கல்லூரி முதல்வர் மனேஷ், துணை முதல்வர் வந்தனா, கல்லூரி தலைவர் அமல்பிரேம் உள்பட பலர் பங்கேற்றனர்.