உள்ளூர் செய்திகள்

பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழுவுக்கு எதிராக வழக்கு

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பி.ஜெகநாத் என்பவர் தாக்கல் செய்த மனு:உயர் கல்வித்துறை, இந்தாண்டு செப்டம்பரில் பிறப்பித்த உத்தரவில், சென்னை பல்கலை துணை வேந்தர் தேர்வுக்கான தேடுதல் குழு உறுப்பினர்களை அறிவித்தது. வேந்தரின் பிரதிநிதியாக பேராசிரியர் பட்டு சத்யநாராயணா, சிண்டிகேட் பிரதிநிதியாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தீனபந்து, செனட் பிரதிநிதியாக டாக்டர் பி.ஜெகதீசன் ஆகியோர் தேடுதல் குழுவில் உள்ளனர்.இதில், யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழுவின் பிரதிநிதி இடம் பெறவில்லை. யு.ஜி.சி.,யின் பிரதிநிதி இல்லாமல், தன்னிச்சையாக தேடுதல் குழுவை, மாநில அரசு நியமித்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவும் உள்ளது. எனவே, உயர் கல்வித்துறை உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, வழக்கறிஞர் ஆர்.கண்ணன் ஆஜராகினர். யு.ஜி.சி., நிதியை, சென்னை பல்கலை பெறுகிறதா&' என, முதல் பெஞ்ச் கேள்வி எழுப்பியது. அதற்கு அரசு தரப்பில், யு.ஜி.சி., நிதி பெறப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், யு.ஜி.சி., தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், கோடிக்கணக்கில் நிதி வழங்கப்படுவதாக தெரிவித்தார். இதையடுத்து, விசாரணையை வரும் 21க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்