உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் தலைமை பண்பை வளர்த்து கொள்ள வேண்டும்

கூடலுார்: பழங்குடி மாணவர்கள் படிக்கும்போதே தலைமை பண்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என மசினகுடி அருகே, நடந்த பயிற்சி முகாமில் அறிவுறுத்தப்பட்டது.மசினகுடி வாழை தோட்டம், ஜி.ஆர்.ஜி., நினைவு மேல்நிலை பள்ளியில், பழங்குடி மாணவர்களுக்கான தலைமை பண்புகளை வளர்த்து கொள்வது குறித்த பயிற்சி முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு, பள்ளி முதல்வர் குமரன் தலைமை வகித்தார்.கூடலுார் வேலி ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் சுபைர் அகமது பேசுகையில், மாணவர்கள் கல்வியுடன் தலைமை பண்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு குழுவுக்கு தலைமையேற்று நடத்துவது; முடிவுகளை தைரியமாக எடுக்க வேண்டும். பொது தேர்வின் போது அச்சமின்றி நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு சாதிக்க வேண்டும், என்றார்.முகாமில், முதுமலை கார்குடி, மசினகுடி, பொக்காபுரம் அரசு பள்ளி பழங்குடி மாணவர்கள் பங்கேற்றனர். கேத்தி வேலி ரோட்டரி கிளப் தலைவர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். ரோட்டரி கிளப் செயலாளர் ராஜேஷ்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்