விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு பள்ளி மாணவர்கள் களப்பயணம்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி இயந்திரவியல் பிரிவு மாணவர்கள், திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகத்திற்கு களப்பயணம் மேற்கொண்டனர். தொழிற்கல்வி ஆசிரியர் மங்கள்நாதன் தலைமை வகித்தார். பயிற்றுநர் விஜய் ஆனந்த் முன்னிலை வகித்தார்.அப்போது விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உந்தும வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இதுவரை விண்வெளியில் ஏவப்பட்ட ராக்கெட்டுகள், கிரயோஜெனிக் இன்ஜின் பற்றி விஞ்ஞானிகள் தெளிவாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.