உள்ளூர் செய்திகள்

மருத்துவ பணியாளர் பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம்

சென்னை: பணி நிரந்தரம் கோரி, பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், 200க்கும் மேற்பட்ட பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் பங்கேற்றனர்.இதுகுறித்து, மருத்துவ பணியாளர் கூட்டமைப்பின் செயலர் சாந்தி கூறியதாவது:கடந்த 2013ல் இருந்து, அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும், 2,500க்கும் மேற்பட்ட பல்நோக்கு மருத்துவ பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உயர் நீதிமன்றம் பல தீர்ப்புகளில், பணி நிரந்தரம் வழங்க உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி, மருத்துவ துறையில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தரம் கோரி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.இவ்வாறு அவர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்