உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆய்வுகூடம் திறப்புவிழா தடுத்து நிறுத்திய பறக்கும்படை

தென்காசி: தென்காசி மாவட்டம் மேலச்செங்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டிருந்த அறிவியல் ஆய்வுக்கூடத்தை திறக்க நடந்த ஏற்பாடுகளை தேர்தல் பறக்கும்படை தடுத்து நிறுத்தினர்.லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. மேலச்செங்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் புதியதாக கட்டப்பட்டுஇருந்த அறிவியல் ஆய்வுக்கூடத்தை மாவட்ட கல்வி அலுவலர் தேவிகா ராணி தலைமையில் திறக்க ஏற்பாடுகள் நடந்தன.தகவல் அறிந்த தேர்தல்அதிகாரிகள் தலைமை ஆசிரியரிடம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் விழா நடத்தக்கூடாது எனக்கூறி விழாவை நிறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்