உள்ளூர் செய்திகள்

கோடைக்கால பயிற்சி முகாம் விருப்பமுள்ளோர் சேர அழைப்பு

கிருஷ்ணகிரி: கோடைக்கால பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.இது குறித்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் 29 முதல் மே 13 வரை, 15 நாட்களுக்கு காலை, 6:30 முதல், 8:30 வரையும், மாலை, 4:30 முதல், 6:30 வரையும் நடக்கிறது. இதில், தடகளம், ஹேண்ட்பால், ஜூடோ, குத்துச் சண்டை, தேக்வாண்டோ ஆகிய விளையாட்டுகள் நடக்கிறது. இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் விளையாட்டு விடுதியில் சேர, அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கப்படும். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்கள் விளையாட்டு விடுதியில் சேர, பரிந்துரை செய்யப்படும். முகாமில், மாவட்டத்திலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் மற்றும் விளையாட்டில் ஆர்வமுள்ள அனைத்து மாணவ, மாணவியரும் பங்கேற்கலாம். பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் தங்களது பெயர்களை, 200 ரூபாய் செலுத்தி மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு, 74017 03487 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்