உள்ளூர் செய்திகள்

பாரதிதாசன் கல்லுாரியில் வள்ளலார் நாள் போட்டி

புதுச்சேரி: பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில், ராமலிங்க அடிகளார் மற்றும் அவர் வகுத்த சன்மார்க்க நெறி குறித்த விழிப்புணர்வு போட்டி நடந்தது. இதன் பரிசளிப்பு விழா நேற்று நடந்தது.கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் கலியபெருமாள் பரிசுகள் வழங்கினார். கல்லுாரி முதல்வர் ராஜி சுகுமார் தலைமை தாங்கினார். புதுச்சேரி வள்ளலார் அவை பொறுப்பாளர் கோவிந்தசாமி முன்னிலை வகித்தார். வள்ளலார் அவை தலைமை ஒருங்கிணைப்பாளர் குஞ்சிதபாதம் வாழ்த்துரை வழங்கினார். 'வள்ளலார் எனும் வழி' என்ற தலைப்பில் அருங்காட்சியக நிறுவனர் அறிவன் உரையாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்