ஆசிரியர்களுக்காக போராடுவேன் காங்., மரிதிப்பேகவுடா உருக்கம்
மைசூரு: ஆசிரியர்களுக்காக தொடர்ந்து போராடுவேன் என்று எம்.எல்.சி., தேர்தலில் தோற்ற, காங்கிரசின் மரிதிப்பேகவுடா கூறினார்.முன்னாள் எம்.எல்.சி., மரிதிப்பேகவுடா, மைசூரில் அளித்த பேட்டி:தெற்கு ஆசிரியர் தொகுதியில் என்னை தோற்கடித்து, வெற்றி பெற்ற விவேகானந்தா பண பலத்தை பயன்படுத்தி உள்ளார். சில ஆசிரியர்களை எனக்கு ஓட்டு போட விடாமல் தடுத்து உள்ளனர். ஆசிரியர்களுக்காக 24 ஆண்டுகள் தொடர்ந்து, சேவை செய்து உள்ளேன்.ஆசிரியர்கள் படும் கஷ்டம், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து, மேலவையில் போராட்டம் நடத்தி இருக்கிறேன். எம்.எல்.சி., தேர்தலில் தோற்றது வருத்தம் அளிக்கிறது. ஆனாலும் ஆசிரியர்களுக்காக தொடர்ந்து போராடுவேன்.என் மீது நம்பிக்கை வைத்து, காங்கிரஸ் மேலிடம் சீட் கொடுத்தது. தோல்விக்காக யாரையும் குறை சொல்ல மாட்டேன். எனது தோல்விக்கு நானே பொறுப்பு. இனிமேல் கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுவேன். கட்சி கொடுக்கும் வேலையை திறம்பட செய்வேன். பதவியை எதிர்பார்த்து வேலை செய்யும் நபர், நான் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.