உள்ளூர் செய்திகள்

திருவனந்தபுரத்தில் கோல்ப் மைதானம் திறப்பு: அமைச்சர் பங்கேற்பு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் கவுடியாரில் மேம்படுத்தப்பட்ட இந்திய விளையாட்டு ஆணையத்தின் கோல்ப் மைதானத்தை அமைச்சர் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார். இந்த தேசிய கோல்ப் அகாடமி, ஒன்பது துளைகள் கொண்ட சர்வதேச தரத்திலானது. அதிநவீன உடற்பயிற்சி மையம், நவீன பொழுதுபோக்கு வசதிகள் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது.அமைச்சர் மன்சுக் மாண்டிவியா பேசுகையில், விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் உலகின் முதல் பத்து நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறவிருக்கிறது. 2036ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் நாட்டில் உள்ள விளையாட்டுத் திறமைகளை வளர்க்கும், என்றார்.சுற்றுலாத்துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி தலைமை தாங்கினார். கேரள அரசின் தலைமைச் செயலாளர் சாரதா முரளீதரன், மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சுமன் பில்லா, இந்திய விளையாட்டு ஆணையத்தின் திருவனந்தபுரம் கோல்ப் கிளப் செயலாளர் ரகுச்சந்திரன் நாயர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்