விழுப்புரத்தில் கலைஞர் நுாலகம் இன்று திறப்பு
விழுப்புரம் : விழுப்புரத்தில் கலைஞர் நுாலகத்தை, துணை முதல்வர் உதயநிதி திறந்து வைக்கிறார்.விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, எம்.ஆர்.சி.ஐ.சி., பள்ளி எதிரில், கலைஞர் நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நுாலகத்தில், 2000 நுால்கள் வைக்கப்பட்டுள்ளது.வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில், இன்று காலை 10:00 மணிக்கு, துணை முதல்வர் உதயநிதி, நுாலகத்தை திறந்து வைக்கிறார். ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.