இலக்கிய திறனாய்வு தேர்வு: தெரிவுப் பட்டியல் வெளியீடு
சென்னை: 2025-2026 கல்வியாண்டிற்கான இலக்கிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் தெரிவுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.கடந்த அக்.11-ம் தேதி இலக்கிய திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இதில் மொத்தம் 2,70,508 மாணவர்கள் எழுதினர். இந்தத் தேர்வின் முடிவுகள் நவம்பர் 18-ம் தேதி வெளியிடப்பட்டன. இதில் அரசுப் பள்ளி, அரசு உதவிப்பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள் என மொத்தம் 1,500 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மாதம் ரூ.1,500 கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.இத்தேர்வு முடிவுகள் அடிப்படையில் 1500 மாணவர்களின் தெரிவுப்பட்டியல் நேற்று (டிச., 1) www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.