கலைத்திருவிழா போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
சிவகங்கை: கல்வித்துறை சார்பில் நடந்த கலைத்திருவிழா போட்டியில் சிவகங்கை மாவட்ட மாணவர்கள் 61 பேர் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கென பள்ளி, வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் கலைத்திருவிழா போட்டி நடத்தப்பட்டது. மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றனர். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து 61 மாணவர்கள் மாநில கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்றனர்.இதில், கிட்டார் வாசித்தலில் மாநில முதலிடம் மற்றும் புல்லாங்குழல் வாசிக்கும் போட்டியில் இரண்டாம் இடத்தை காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலை பள்ளி மாணவர் திக்விஜய் ஹரி பெற்று சாதனை படைத்து கலையரசன் விருதை பெற்றார். இவர் உட்பட 20 மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் முதலிடமும், இரண்டாம் இடத்தை 28 மாணவர்கள், மூன்றாம் இடத்தை 13 மாணவர்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இம்மாணவர்களை கலெக்டர் பொற்கொடி, முதன்மை கல்வி அலுவலர் பாலதண் டாயுதபாணி ஆகியோர் பாராட்டினர்.