டி.என்.பி.எல்., நிறுவனத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு
கரூர்: கரூர் மாவட்டம், புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.முதன்மை மேலாளர் (மனித வளம்) சிவக்குமார் தலைமை வகித்தார். இங்கு, ஜாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், ஜாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், எளிய மக்களின் உரிமைகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு சமத்துவ நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில், முதன்மை மேலாளர் (மனித வளம்) வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.