உள்ளூர் செய்திகள்

தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரியின் பட்டமளிப்பு விழா

கோவை: தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரியின் 14வது பட்டமளிப்பு விழா, பல்கலையின் நிறுவனர் மற்றும் வேந்தர் சீனிவாசன் தலைமையில் நடந்தது.பேரி வெஹ்மில்லர் இந்தியா நிறுவனத்தின் உலகளாவிய திறன் மைய பிரதிநிதி லட்சுமி பிரியா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.பல்கலையின் வேந்தர் சீனிவாசன் பேசுகையில், “பட்டதாரிகள் வெறும் வேலை தேடுபவர்களாக சுருங்கி விடாமல், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்முனைவோராக உயர வேண்டும்,” என்றார்.கல்லுாரி முதல்வர் ஜெகதீசன் பட்டமளிப்பு விழா அறிக்கையைச் சமர்ப்பித்தார். பட்டம் பெற்ற 448 மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.கல்லுாரி செயலர் நீலராஜ், இயக்குனர் வினோத், கல்விப்பிரிவு டீன் பாகீரதி மற்றும் பல்வேறு துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்