பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை சிறப்பு டெட் தேர்வு
கோவை: தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயம் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.அதன்படி, பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக 3 சிறப்பு டெட் தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. முதல் கட்டமாக ஜூலை 4ம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூலை 5ம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தேர்வு நடக்கிறது.தேர்வுக்கான ஏற்பாடுள் மும்முரமாக நடக்கின்றன. முதல் நாளில் 8 தேர்வு மையங்களில் 2,230 பேரும், அடுத்த நாளில் 23 மையங்களில் 6,501 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.