உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளிக்கு அரங்கு: த.வெ.க., எம்.எல்.ஏ., உறுதி

காரப்பாக்கம்: “காரப்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆடிட்டோரியம் கட்டித் தரப்படும்,” என, த.வெ.க., எம்.எல்.ஏ., சரவணன் உறுதியளித்தார்.காரப்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் படிப்பு உபகரணங்கள் வழங்க, 198வது கவுன்சிலர் லியோ சுந்தரம் முன்வந்தார்.இது தொடர்பாக, பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., சரவணன், 5 லட்சம் ரூபாய் மதிப்பில் ஊக்கத்தொகை மற்றும் உபகரணங்கள் வழங்கினார்.தொடர்ந்து, கவுன்சிலர் லியோ சுந்தரம் மற்றும் பள்ளி நிர்வாகம், பள்ளிக்கு ஆடிட்டோரியம் கட்டித்தர வேண்டும் எனக் கேட்டனர். “தொகுதி மேம்பாட்டு நிதியில் ஆடிட்டோரியம் கட்டி தரப்படும்” என, எம்.எல்.ஏ., உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்