நீட் தேர்வு பயிற்சி அளிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு
சென்னை: சமூக நீதி துறையின் கீழ் செயல்படும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, நீட், ஜே.இ.இ., 'க்யூட்' உள்ளிட்ட பல்வேறு உயர் கல்வி நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.போட்டித் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்குவதற்காக, தகுதியுடைய முன்னணி பயிற்சி நிறுவனங்கள், தங்களின் விருப்பங்களை தெரிவிக்கலாம் என, தமிழ்நாடு பழங்குடியினர் நல இயக்குநரகம் அழைப்பு விடுத்துள்ளது.மேலும் தகவல்களுக்கு, https://www.tntribalwelfare.tn.gov.in/ என்ற இணையதளத்திலோ அல்லது 72007 38258, 73739 44312, 73388 01434 உள்ளிட்ட மொபைல் போன் எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.