உள்ளூர் செய்திகள்

சர்வதேச திறன் மையங்களுக்கான முன்னணி மாநிலம் தமிழகம்

சென்னை: “சர்வதேச திறன் மையங்களுக்கான முன்னணி இடமாக தமிழகத்தை மாற்றுவதில் அரசு உறுதியாக உள்ளது” என, தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.சென்னையில் செயல்படும் யு.பி.எஸ்., இந்தியா குழுமத்தின் தொழில்நுட்ப மைய அதிகாரிகள், தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவை, சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினர்.இது குறித்து, அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட அறிக்கையில், “தமிழக இளைஞர்களின் திறமை வளத்தை வலுப்படுத்துவது முதல் ஏ.ஐ., தலைமையிலான உலகளாவிய செயல்பாடுகளின் அடுத்த கட்டத்தை செயல்படுத்துவது வரை, உயர் மதிப்புடைய சர்வதேச திறன் மையங்களுக்கான முன்னணி இடமாக தமிழகத்தை மாற்றுவதில் அரசு உறுதியாக உள்ளது,” என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்