உள்ளூர் செய்திகள்

பல்கலைக்கழகம்-வங்கி இணைந்து நடத்தும் மேலாண்மை படிப்பு

என்.ஐ.ஐ.டி. பல்கலைக்கழகமும், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியும் இணைந்து வணிக மேலாண்மையில்(பைனான்ஸ் & பேங்கிங்) முதுநிலை படிப்பை வழங்க உள்ளன. மூன்று வருடங்கள் பணி அனுபவம் கொண்டிருந்து, அதேசமயம் 30 வயதிற்குள் இருந்தால் இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் இந்த 2 வருட படிப்பின் ஒரு பகுதியாக ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் இன்டர்ன்ஷிப் பெறவும். இந்த இன்டர்ன்ஷிப் சமயத்தில் ரூ.50000 வழங்கப்படும். மேலும் வருடத்திற்கு 2.5% வட்டியில் ரூ.4.5 லட்சம் சலுகை கடனாக ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வழங்கும். இந்த லோனுக்கான மாத தவணைத்தொகையை கட்டுவதானது, நீங்கள் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் பணிக்கு சேர்ந்து முதல் சம்பளம் வாங்கியப் பிறகுதான் ஆரம்பிக்கும். மேலும் படிப்பின்போது நீங்கள் உதவித்தொகையாக ரூ.10000 பெறுவீர்கள். இதை படிப்பதற்கான மாணவர் தேர்வானது மெரிட், நுழைவுத்தேர்வு, குரூப் டிஸ்கஷன், நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நடைபெறும். இதைப்பற்றிய விரிவான விவரங்களுக்கு www.icicicareers.com என்ற வலைத்தளம் செல்லவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்