உள்ளூர் செய்திகள்

எளிய வேலைவாய்ப்புள்ள சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகள்

தொழில் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோருக்கான கல்வி நிறுவனம்(ஐ.சி.இ.டி), எம்பெட்டட் சிஸ்டம் டிசைன் மற்றும் ஹார்ட்வேர் மற்றும் நெட்வொர்கிங் ஆகிய துறைகளில் டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை தொடங்க உள்ளது. கோவையிலுள்ள பீட்டா தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து இந்த முயற்சிகளை ஐ.சி.இ.டி. மேற்கொள்கிறது. இந்த ஐ.சி.இ.டி. பாரதிதாசன் பல்கலையை சார்ந்தது. இந்த படிப்புகளை மேற்கொள்பவர்களிடம் படைப்பாக்கத் திறனை உருவாக்க, புத்தாக்க(இன்னோவேடிவ்) திட்டங்களின் மூலம் பயிற்சி அளிக்கப்படும். மேலும் கல்விக்கும், வேலைத் தேவைக்கும் இடையே பாலம் அமைப்பதுதான் இந்த புதிய படிப்புகளின் நோக்கம் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எம்பெட்டட் டிசைன் சிஸ்டம் துறையில் டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை மேற்கொள்ள குறைந்தபட்ச தகுதியாக 12 ம் வகுப்பு தேறியிருக்க வேண்டும். ஹார்ட்வேர் நெட்வொர்கிங் படிப்பிற்கு குறைந்தபட்சம் 10 வகுப்பை தொட்டிருக்க வேண்டும். அதில் தேறியிருந்தாலோ அல்லது தோல்வியடைந்தாலோ பிரச்சினை இல்லை. சான்றிதழ் படிப்புகள் 3 மாதங்களும், டிப்ளமோ படிப்புகள் 6 மாதங்களும் நடைபெறும். படிப்பை முடிப்பவர்கள் தகுந்த வேலை வாய்ப்பை பெற, பாரதிதாசன் பல்கலையும், பீட்டா தொழில்நுட்ப நிறுவனமும் உதவி புரியும் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்