உள்ளூர் செய்திகள்

மூளையின் திறன் குடும்ப ஜெனடிக் அமைப்பையே சார்ந்துள்ளது

ஒருவரது மூளையின் செயல்பாட்டுத் திறன், அவரது குடும்பத்தினுடைய ஜெனடிக் அமைப்பின் அடிப்படையிலேயே இருக்கிறது என்று சர்வதேச ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலையால் வழிநடத்தப்பட்ட ஒரு சர்வதேச ஆய்வுக் குழு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஒரு செயலை ஒருவர் மற்றவரை விட சிறப்பாக மேற்கொள்வதற்கு அவரது குடும்பத்தின் ஜெனடிக் அமைப்பே காரணம். திறமையான தகவல் தொடர்பை உண்டாக்க அதிக இணைப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் இந்த இணைப்புகளை ஏற்படுத்துவதற்கான தொடர்பிழைகளை குறைத்தல் ஆகிய இரண்டு விஷயங்களுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துவதன் மூலம் தனது செயல்திறனை அதிகரிக்க மூளையானது முயற்சி செய்கிறது. இந்த சமநிலை தன்மையானது குடும்பத்தின் ஜெனடிக் அடிப்படையிலானது. இந்த ஆய்வானது மூளை செயல்பாட்டில் ஜீன்களின் பங்கைப் பற்றிய விரிவான ஆராய்ச்சியை தூண்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்