உள்ளூர் செய்திகள்

நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமா சேர்க்கை அறிவிப்பு

புதுடெல்லியில் உள்ள நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமா, 2011-12ஆம் ஆண்டில் மூன்று ஆண்டு டிப்ளமோ படிப்பான டிரமாட்டிக் ஆர்ட்ஸ் பிரிவில் மாணவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய கலாச்சாரத் துறையின் நிதியுடன் செயல்படும் தேசிய ஸ்கூல் ஆப் டிராமா, மாணவர்களிடம் இருந்து சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. டிரமாட்டிக் ஆர்ட்ஸ் கோர்ஸ் வரும் ஜூலை மாதம் துவங்கும். இந்த கோர்ஸில் நடிப்பு, வடிவமைப்பு மற்றும் திரையரங்குத் தொடர்பான துறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. தகுதி தேவையான கல்வித் தகுதி 1. இந்தியா அல்லது வெளிநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.2. குறைந்தது 6 தியேட்டர் புரொடக்ஷன் பணிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.3. ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் பணியாற்றுவதற்கான மொழி ஆற்றல் இருத்தல். வயதுத் தகுதி 1) 1.7.2011ன் தேதிப்படி 20 வயதிற்குக் குறையாமலும், 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 2) எஸ்.சி./எஸ்.டி. மாணவர்களுக்கு 5 வயது வரை உச்ச வரம்பு தளர்த்தப்படும். எஸ்.சி./எஸ்.டி./ஓ.பி.சி. வகுப்பினருக்கான ஒதுக்கீடுமொத்தமுள்ள 26 இடங்களில், 4 இடங்கள் எஸ்.சி. வகுப்பினருக்கும், 1 இடம் எஸ்.டி. வகுப்பினருக்கும், ஓ.பி.சி.யினருக்கு 5 இடங்களும் இந்தியா அரசின் சட்டப்படி ஒதுக்கப்படுகிறது. தேர்வு பள்ளி நிர்வாகம் நியமிக்கும் உயர்நிலைக் குழு, விண்ணப்பித்த மாணவர்களின் திறமை, ஆர்வம் போன்றவற்றை கண்டறிந்து தேர்வு செய்கிறது. குழுவின் முடிவே இறுதியானது. பாட மொழிகள் : ஹிந்தி அல்லது ஆங்கிலம் துவக்க தேர்வு நடைபெறும் மையங்கள்துவக்க தேர்வு நாட்டின் 5 இடங்களில் நடத்தப்படும். டெல்லி, கொல்கட்டா, பெங்களூரு, மும்பை மற்றும் குவஹாத்தி போன்ற நகரங்களில் நடத்தப்படும். தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், டெல்லியில் நடத்தப்படும் தொழிற்பட்டறைக்கு அழைக்கப்படுவார்கள். இந்த படிப்பில் சேர்வதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்த மேலும் விவரங்கள் அறிய www.nsd.gov.in என்ற இணையதளத்தைப் பாருங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்